மீண்டும் திரையரங்கில் கமல்ஹாசனின் நாயகன் படம்! ரோபோ சங்கருக்கு முதல் டிக்கெட்
கமல் நடித்த நாயகன் படம் மறுவெளியீடு செய்யப்படும் நிலையில், ரோபோ சங்கருக்காக முதல் டிக்கெட்டை எடுத்து வைப்பதாக திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம்வந்த ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இவர் ஆரம்பத்தில் காமெடி நடிகராக வலம்வந்த நிலையில், பின்பு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்பு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இவரது மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மீண்டும் வெளிவரும் நாயகன் படம்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வெற்றிப்படமான நாயகன் படத்தினை மறுவெளியீடு செய்கின்றனர்.
இதற்கான முன்பதிவு தொடங்கும் நிலையில், முதல் டிக்கெட்டினை ரோபோ சங்கருக்காகவும், அடுத்த சில டிக்கெட்டியினை அவரது குடும்பத்தினருக்கும் சென்னை கமலா திரையரங்கு உரிமையாளர் எடுத்து வைத்துள்ளாராம்.
Veera: அடித்துக் கொண்ட அண்ணன் தம்பிகள்! பிரியும் நிலையில் ராமச்சந்திரன் குடும்பம்... பேரதிர்ச்சியில் வீரா
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் அவரது படம் வெளிவரும் போது முதல் டிக்கெட்டினை முன்பதிவு செய்து கொள்வாராம்.
தற்போது அவர் இல்லாத நிலையில், திரையரங்கு உரிமையாளர் அவருக்காக முதல் டிக்கெட்டினை எடுத்து வைத்துள்ளாராம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |