குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் ட்ரெண்டாகியுள்ள நாவல்பழ சட்னி... எப்படி செய்வது?
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான நந்தகுமார் நாவல் பழத்தை பயன்படுத்தி சட்னி செய்திருந்தார்.
அதைப் பார்த்த நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது கேட்டரிங் சர்வீஸில் இனி நாவல்பழ சட்னியை அறிமுகப்படுத்த இருப்பதாக குறிப்பிட்டு, அதன் சுவைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நாவல்பழ சட்னி தயாரிப்பு ட்ரெண்டாகி வருகின்றது. அந்தவகையில் இட்லி தோசைக்கு தொட்டுககொள்ள பக்காவாக பொருந்தும் நாவல்பழ சட்னியை எப்படி செய்வது என அந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நாவல் பழம் - 20
துருவிய தேங்காய் - ½ கப்
பச்சை மிளகாய் - 3
பொடித்த வெல்லம் - 1 மேசைக்கரண்டி
புளி - பாதி எலுமிச்சை அளவு
மிளகு - 6-7
சீரகத் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் நாவல் பழத்தின் விதையை நீக்கிவிட்டு சதைப் பகுதிகளை வெட்டி ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் பாதி எலுமிச்சை அளவிலான புளியை எடுத்து, அதில் உள்ள நார் பகுதியை நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகு, சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக அதில் வெட்டி வைத்துள்ள நாவல் பழத்தை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் நாவல் பழ சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |