கரும்புள்ளிகளை வேருடன் எடுக்கும் மாஸ்க்! நைட் டைம்-ல போடுங்க
பொதுவாக வெளியில் செல்லும் போது அழுக்கடைந்த காற்று தான் அதிகமாக இருக்கின்றது. இதனால் முகத்தில் பொலிவு இல்லாமல் கருப்படைந்து இருக்கும்.
இதனை கவனிக்காமல் விட்டால் கரும்புள்ளிகளாகவும் பருக்களாவும் மாறி முகத்தின் அடையாளத்தையே மாற்றி விடும்.
கரும்புள்ளிகள் வந்து விட்டால் அது என்ன பண்ணாலும் சில சம்யங்கள் செல்லாமல் அப்படியே இருக்கும்.
அழுக்கான சூழல் மட்டுமல்ல ஆரோக்கியம் குறைப்பாட்டினாலும் இந்த கரும்புள்ளிகள் தோன்றும்.
இது தொடர்பான ஏராளமான மாஸ்க்குகள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இதில் கூறப்படும் விடயங்கள் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
மாறாக நாம் சமையல் அறையிலுள்ள சில பொருட்களை கொண்டு சூப்பரான மாஸ்க் தயாரிக்கலாம். சருமத் துளைகளின் ஆழம் வரை சென்று அகற்றும்.
அந்த வகையில் கெமிக்கல்கள் அல்லாத நேச்சுரல் பீல்-ஆஃப் மாஸ்க்குகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
1. ஆக்டிவேட்டட் சார்கோல் மற்றும் ஜெலட்டின் மாஸ்க்
1. ஒரு பவுலில் 1/2 டீஸ்பூன் ஆக்டிவேட்டட் சார்கோல், 1/2 டீஸ்பூன் ஜெலட்டின் ஆகியவற்றை போட்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளுங்கள்.
2. பின்னர் ஒரு பிரஷ் அல்லது கைகளால் எடுத்து முகத்தில் தடவுங்கள். ( கண்கள் மற்றும் கண் புருவங்கள் மேல் தடவ வேண்டாம்.)
3. முகத்தை அசைக்க முடியாத அளவிற்கு காய்ந்த பின்னர் கீழிருந்து மேலாக உரித்து எடுங்கள்.
4. கலற்றிய பின்னர் முகத்தை பாருங்கள் கரும்புள்ளிகள் மாஸ்க்கில் கலண்டு வந்து விடும்.
2. பால் மற்றும் தேன் மாஸ்க்
1. ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
2. அடுப்பில் லேசாக கலவையை சூடாக்கிய பின்னர் முகத்தில் அப்ளை செய்யவும்.
3. அதனுடன் காட்டன் ஸ்ட்ரிப்புகளை முகத்தில் விரித்து, 20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
4. காய்ந்ததும் மேல் நோக்கி ஸ்ட்ரிப்புகளை உரித்து எடுக்க வேண்டும்.
5. இவ்வாறு அகற்றிய பின்னர் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை படிவுகள் ஆகியவற்றிற்கு சிறந்த பலன் கிடைக்கும்.