குளிர் காலத்தில் சருமத்தை பொலிவாக்கும் 5 வகை எண்ணெய்கள்- செய்து பாருங்க
குளிர் காலத்தில் பலரின் சருமம் வறண்டு போய் விடும். இதனால் வெளியில் செல்லாத முடியாத நிலையும் ஏற்படலாம்.
குளிர்காலங்களில் சருமம் முகத்தை சுத்தம் செய்ய சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம்.
இது முகத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், பல சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும்.
முகத்தை சுத்தம் செய்ய, விலையுயர்ந்த க்ளென்சர்கள் மற்றும் ஃபேஸ் வாஷ்களை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். இது காலப்போக்கில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே, குளிர்காலத்தில் உங்கள் முகத்தை பளபளப்பாகவும், தழும்புகள் இல்லாமல் இருக்கவும் எண்ணெய்கள் பயன்படுத்தலாம். அப்படியான எண்ணெய்கள் 3 பற்றி தெரிந்து கொள்வோம்.
1. ரோஸ்ஷிப் எண்ணெய்:-
அத்தியாவசிய ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ரோஸ்ஷிப் எண்ணெய்யானது வறண்ட, மந்தமாக இருக்கும் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது. இந்த எண்ணெய் வீக்கத்தை குறைத்து குளிர்காலத்தில் பிரகாசமான தோற்றத்தை கொடுக்கிறது.
2. எள் எண்ணெய்:-
எள் எண்ணெயில் வைட்டமின் பி மற்றும் ஈ உள்ளன. இது சருமம் மற்றும் ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகின்றது. இந்த எண்ணெய் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சருமத்திற்கு நன்மையளிக்கிறது. சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் எள் எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்தால் சோர்வு நீங்கும்.
3. ஆர்கான் ஆயில்:-
ஆர்கான் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபாட்டி ஆசிட்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியன உள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, வயதான எதிர்ப்பு பண்புகளையும் எதிர்த்து போராடுகின்றது. அத்துடன் வறண்ட சருமத்தை பிரகாசமாக்குகின்றது. தோலில் சிலருக்கு கோடுகள் அல்லது காயங்களின் தழும்புகள் இருக்கும். இதனை இல்லாமாக்கும் வேலையை இந்த வகை எண்ணெய்கள் செய்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |