பல் வியாதிக்கு இன்றுடன் முடிவு- மூலிகை பற்பசை செய்து பயன்படுத்துங்க
மனிதர்களின் உறுப்பில் பற்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உணவு உண்ணும் செயன்முறை துவக்கம், பேசுதல் வரை அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. உணவை நன்றாக அரைத்து உள்ளே அனுப்புகிறது. இதனால் செரிமானம் இலகுவாக நடந்து உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.
முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் பற்கள் அவசியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒருவருக்கு நோய்கள் மற்றும் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுகள் தான். ஈறுகள் பிரச்சினைகள் என்றால் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகள் வரலாம். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்.
அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி விடும். நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்கள், உமிழ் நீர், அழுகிய பொருட்கள் ஆகிய பொருட்கள் ஒன்றாக கலந்து இது போன்ற பள்ளங்களை உண்டாக்குகிறது.
இப்படியான நோய்களை வரவிடாமல் தடுக்க நினைப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பற்காரை அகற்றி பற்களை சுத்தமாக வைத்து நினைப்பவர்கள் Ultra Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் சுத்தம் செய்யலாம்.
இதற்கான வசதிகள் இல்லாதவர்கள் வீட்டில் மூலிகை பொருட்களை கொண்டு செய்யப்படும் பற்பசைகளை பயன்படுத்தலாம். அப்படியாயின், இயற்கையான பொருட்களை வைத்து எப்படி பற்பசை தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
மூலிகை பற்பசை தயாரிக்கும் முறை
எமது முன்னோர்கள் ஆலங்குச்சி, வேப்பங்குச்சி ஆகியவற்றை பயன்படுத்தி தான் பல் துலக்கினார்கள். மாறாக அப்போது பற்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்தது.
தற்போது இருப்பவர்கள் அப்படியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது தான் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம். அப்படியானவர்கள் மருந்து கடைகளில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு பற்பசை செய்து பயன்படுத்தலாம். இதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள்
- கரித்தூள் - இரண்டு டீஸ்பூன்
- வேப்ப இலை பொடி- இரண்டு டீஸ்பூன்
- துளசி பொடி - இரண்டு டீஸ்பூன்
- இலவங்க பொடி- இரண்டு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - ஒரு டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- இரண்டு டீஸ்பூன்
செய்முறை
மேற்குறிப்பிட்ட பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும். பசை போன்று வராவிட்டால் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளலாம்.
பேஸ்ட் பதம் வந்த பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் இந்த பற்பசையை நாம் உபயோகப்படுத்தி பற்களை தேய்க்கும் பொழுது நம்முடைய வாயில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறி, ஆரோக்கியமான பற்களை பெறலாம்.
அத்துடன் சிலருக்கு ஈறுகளில் பிரச்சினைகள் இருக்கும். அப்படியானவர்கள் இந்த பற்பசையை தொடர்ந்து பயன்படுத்தினால் ஈறுகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |