நடிகர் சூர்யாவின் மகளா இது? ஹீரோயின் போல மாறிட்டாரே...கெத்து காட்டும் மகன்! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்
நடிகர் சூர்யாவின் குடும்ப புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது.
இந்த விருது விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதில் தமிழில் வெளிவந்த 'சூரரைப் போற்று' என்னும் திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது.
அவற்றில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றார். விருதை பெற நடிகர் சூர்யா குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார்.
அங்கு மகள் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.