இன்னொரு உன்னத கலைஞரையும் வாரிச் சென்ற கொரோனா! பேரதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்
பிரபல மலையாள நடிகரும், எழுத்தாளரும், தேசிய விருது வென்ற கதாசிரியருமான மாதம்பு குஞ்சுக்குட்டன் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 79. இந்தியாவை சூறையாடி வரும் கொரோனா இரண்டாம் அலை ஏகப்பட்ட சினிமா பிரபலங்களையும் தொடர்ந்து வாரிக் கொண்டு செல்கிறது.
இந்நிலையில், தற்போது மலையாள திரையுலகின் மூத்த நடிகரும், சிறந்த கதாசிரியருமான மாதம்பு குஞ்சுக்குட்டனின் மறைவு மலையாள திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி உள்ளது.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என்று அனைவரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.