நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? குடும்பத்துடன் வெளியான அழகிய புகைப்படம்
நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.
நெப்போலியன் கடந்த 23 வருடங்களாக ஜீவன் டெக்னலாஜிஸ் என்ற பெயரில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார்.
அவரது மனைவியும் அதே நிறுவனத்தின் பைனான்ஸ் விஷயங்களை கவனித்து வருகிறாராம்.
சினிமா நடிகர்கள் எப்போதும் அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குவார்கள் அல்லது சொத்து வாங்கி வைத்து செட்டில் ஆவார்கள்.
ஆனால் நெப்போலியன் சற்று வித்தியாசமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவர் படிக்கவில்லை என்றாலும் பணம் முதலீடு செய்து அந்த நிறுவனம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.
இதேவேளை, அவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு விவசாயமும் செய்கின்றார். இது பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது.