தற்கொலை செய்து கொள்ள எண்ணினேன்- நடிகை நமீதா
தமிழ் ரசிகர்களின் விருப்பமான நடிகைகளில் ஒருவர் நமீதா.
இவர் தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு தற்போது இரட்டை மகன்களுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக நமீதா தெரிவித்துள்ளார்.
"வாழ்க்கையில் எல்லாமே இருந்தும், எதுவும் இல்லாதது போன்ற உணர்வு இருந்தது. ஒரு கட்டத்தில் உயிருடன் இருக்க வேண்டுமா என்ற அளவுக்கு மனநிலை மோசமாக இருந்தது. தற்கொலை பற்றியும் யோசித்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
அந்த சமயத்தில் இஸ்கான் கோவிலுக்கு சென்று அழுதுக் கொண்டிருந்தபோது, நடிகை பிரியா ராமனை முதன்முறையாக சந்தித்ததாக நமீதா தெரிவித்தார்.
தனது மனநிலையை கூறியபோது, "நான் இருக்கிறேன், கிருஷ்ணர் இருக்கிறார்" என்று ஆறுதல் கூறிய பிரியா ராமன், துளசி மாலை கொடுத்து தினமும் தியானம் செய்யுமாறு அறிவுரை வழங்கியதாக கூறினார்.

அதன்படி தியானம் செய்யத் தொடங்கிய பிறகு மன அழுத்தத்தில் இருந்து படிப்படியாக மீண்டதாக நமீதா தெரிவித்துள்ளார்.
"2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த இந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகே என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன" என்றும் அவர் கூறினார்.
பின்னர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமீதா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.