வெகு விமர்சையாக நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலய 7ஆம் நாள் திருவிழா - நேரலை
வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா, கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.
7ஆம் நாள் திருவிழா நேரலை
தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள இப்பெருவிழாவில், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், இன்று 7ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.

பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வரும் சமய மற்றும் கலாசார மரபுகளுக்கு அமைய இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா, இலங்கையின் தமிழர் பண்பாடு மற்றும் சைவ சமய பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
ஆலயத்தை நோக்கி திரளும் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கந்தப்பெருமானை தரிசித்து, தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
திருவிழா வீதியெங்கும் ஒலிக்கும் நாதஸ்வர இசையும், பக்தர்களின் “அரோகரா” கோஷமும், விழாவின் ஆன்மிகச் சிறப்பை மேலும் அதிகரித்து வருகின்றன.
பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் இந்தப் பாரம்பரியப் பெருவிழாவின் 7ஆம் திருவிழா நிகழ்வுகளை, நல்லூர் கந்தசுவாமி பெருமானின் அருள்தரிசனத்துடன் இந்தக் காணொளி வாயிலாக நேரலையில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |