நயன்தாரா பானியில் திருமணத்தை விற்று லாபம் பார்க்க ஆசைப்படும் நாக சைத்தன்யா- எவ்வளவு தெரியுமா?
நாக சைத்தன்யா, சோபிதா திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நாக சைத்தன்யா, சோபிதா திருமணம்
தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.
இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நாக சைத்தன்யா, சோபிதா திருமணம் எதிர்வரும் டிசம்பர் 4ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
நெட்பிளிக்ஸ் கொடுத்த பணம் எவ்வளவு?
இந்த நிலையில், நாக சைத்தன்யா, சோபிதா திருமணம் குறித்து புதிய தகவலொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதாவது, மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தின் ஒளிபரப்பும் உரிமம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்களின் திருமண காணொளி, ரூ.50 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
“நயன்தாராவின் திருமணம் ஆவணப்படமாக்கப்பட்டு வெளியாகிய நிலையில் நாகர்ஜுனா இந்த முடிவுக்கு வந்துள்ளாரா?” என கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |