இரண்டாவது திருமணம் செய்த தனது தாயை நாக சைதன்யா வெறுத்தாரா? நிச்சயதார்தத்தில் அவிழ்ந்த உண்மை
நாக சைதன்யாவின் தாய் லட்சுமி, தந்தை நாகார்ஜுனாவை விவாகரத்து செய்த பின்பு யாரை திருமணம் செய்து கொண்டார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.
நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், அவரை விவாகரத்து செய்த பின்பு தற்போது இரண்டாவதாக சோபிதாவைக் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்நிலையில் நாக சைதன்யாவின் தாய் லட்சுமியைக் குறித்த தகவலும், நிச்சயதார்த்தத்திற்கு அவர் தனது இரண்டாவது கணவருடன் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் நாகார்ஜுனா முதல் மனைவியான லட்சுமிக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா தனது மனைவி லட்சுமியை கடந்த 1990ம் ஆண்டு விவாகரத்து செய்த பின்பு, நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது திருமணம்
நாகார்ஜுனாவை பிரிந்த லட்சுமி ஸ்ரீராம் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சரத் விஜயராகவனை இரண்டாவது திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார்.
நடிகர் நாக சைதன்யாக தனக்கு விருப்பம் இல்லாமல் தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் தான் தந்தையுடன் வாழ்ந்து வருகின்றார் என்ற தகவல் கசிந்த நிலையில், இதற்கு நாச சைதன்யாவின் நிச்சயதார்த்தம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆம் நாச சைதன்யா, சோபிதா நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தனது இரண்டாவது கணவருடன் கலந்து கொண்ட லட்சுமி மகனை வாழ்த்திவிட்டு சென்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |