சமந்தாவை follow செய்யும் நாக சைதன்யா: கண்டுக்கொள்ளாமல் இருக்கும் சமந்தா
நாக சைத்தன்யா சமந்தாவை விட்டு பிரிந்தாலும் தனது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகிறார். ஆனால் சமந்தா இதை கண்டுக்கொள்ளமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாக சைத்தன்யா - சமந்தா
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே வருடத்தில் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அவர்கள் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கூட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இந்நிலையில் நடிகர் நாக சைத்தன்யா சமந்தாவை follow செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
சமந்தாவை follow செய்யும் நாக சைத்தன்யா
இன்ஸ்டாகிராமில் சமந்தாவை தொடர்ந்து நாக சைதன்யா தொடர்ந்து வருவதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். இந்த விடயமானது இணையத்தில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவைப் பற்றி வெளிப்படையாகப் பேச சமந்தா விரும்பியதில்லை.
ஆனால் சமந்தாவுடன் திரையில் கெமிஸ்ட்ரி சிறந்தது என சைதன்யா ஸ்டேட்மென்ட் கொடுத்து இருந்தார். அதுமட்டுமன்றி அவருக்கு பெரிய கனவுகள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் நிறைவேற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.