ரசிகரை தள்ளிவிட்ட பாதுகாவலர்கள்... உடனே ஜூனியர் என்.டி.ஆர். செய்த செயல்
கூட்டத்தில் ரசிகரை தள்ளிவிட்ட பாதுகாவலர்களை திட்டி, ஜூனியர் என்.டி.ஆர். செய்த செயல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 3 பிரிவுகளில் படங்கள் தேர்வானது.
சிறந்த பாடலுக்காக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டார்கள்.
திடீரென என்.டி.ஆரை கட்டிப்பிடித்த ரசிகர்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜூனியர் என்.டி.ஆர் ஒரு நிகழ்ச்சி மேடையில் சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு ரசிகர் ஓடி வந்து என்.டி.ஆரை கட்டிப்பிடித்தார். இதனால், என்.டி.ஆர். சற்று நேரம் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பாதுகாவலர்கள் அந்த ரசிகரை வலுக்கட்டாயமாக இழுக்க, என்.டி.ஆர். பாதுகாவலர்களிடம் அப்படி செய்யாதீர்கள் என்று கூறி, அந்த ரசிகரை கட்டிப்பிடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்.டி.ஆரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#JRNTR Love Towards His Fans?❤️pic.twitter.com/mOBwVh8pBJ
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 18, 2023