7 தலை நாகத்தின் சிலை…. தமிழன் கட்டிய மிகப்பெரிய கோவில்! யாருக்கு தெரியுமா?
இன்று நாம் தமிழன் கட்டிய உலகிலேயே மிகப்பெரிய கோவில் பற்றியும் அதில் இருக்கும் மர்மங்கள் குறித்தும் பார்க்க போகின்றோம்.
கம்போடியாவில் இருக்கின்ற அங்கோர் வாட் பகுதியில் தான் உலகிலேயே மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது.
சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சென்று சூரிய உதயத்தைப் பார்ப்பது தான் தான் மிகச்சிறப்பான விடயம்.
அதை Golden Sunrise என்று அழைக்கிறார்கள். சூரியவர்மன் என்னும் மன்னரால் சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான கற்கோவில் தான் இது.
12 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகு இது புத்தர் கோவிலாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் தற்போது கோவலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலை தான். தண்ணீரில் மிதக்கும் மிகப்பெரிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் கடந்து சென்று தான் கோவிலுக்குள் நுழைய முடியும்.
இந்த அகழியைச் சுற்றி தான் கோவில் அமையப் பெற்றிருக்கிறது. சூரிய பகவானின் கோவில் என்பதால் அதிகாலையிலேயே சூரியன் உதித்துவிடுகிறது. கோயிலின் வெளிப்புறத்தில் கோட்டைக்குள் நுழையக் கூடிய இடத்தில் இருக்கக்கூடிய முற்றத்தின் வலது புறமும் இடது புறமும் என மிகப்பெரிய இரண்டு நூலகங்கள் இருக்கின்றன.
அது ஏன் நுழைவாயிலேயே நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் கேட்கலாம். முற்காலத்தில் இந்த கோவிலுக்குள்ளேயே பல்கலைக்கழகம் இருந்ததாம். இந்த கோவிலைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மையான நீர் ஓடக்கூடிய அகழி அமைந்திருக்கிறது. இந்த அகழியைச் சுற்றி தான் கோவில் அமையப் பெற்றிருக்கிறது.
பொதுவாக கடவுள்கள், தேவர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படுவது தான் மேரு மலை. இந்த அங்கோர்வாட் என்பது மேரு மலையின் குறியீடு என்று சொல்லப்படுகிறது.
கோவிலின் பல இடங்களில் பாம்புகள், சிங்கங்கள், கருடன் ஆகிய விலங்குகளின் தலைகள் பலவும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
ஏழு என்னும் எண் இறைவனை அடைவதற்கான சூட்சமம் நிறைந்த எண்ணாகக் கருதப்படுவதால், மன்னர் நுழையும் நுழைவாயிலுக்கும் 200 மீட்டர் தொலைவில் 7 தலை நாகத்தின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோவிலில் அவர்களுடைய மொழிகளால் மநதிரங்களை உச்சரிச்சாலும் அதில் பல இடங்களில் பரமேஸ்வரன் போன்ற சிவ நாமங்களும் சிவ மந்திரங்களும் தான் ஓதப்படுகின்றன. அந்த கோவிலின் உள்ளே கிட்டதட்ட ஏராளமான புத்தர் சிலைகள் இருக்கின்றன.