நடிகையான சூப்பர் சிங்கர் பிரியங்கா! எந்த படத்தில் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
பிசாசு 2 படத்தின் புரோமோஷன் வீடியோவில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாக்கிய ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் முறையாக ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசி உள்ளார்.
இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகையான சூப்பர் சிங்கர் பிரியங்கா?
இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று தயாராகி உள்ளது.
இந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
‘நெஞ்சே கேளு’ என்ற டைட்டில் உருவாகி வரும் புரமோஷன் பாடலில் தான் பிரியங்கா நடித்திருக்கின்றார்.
மேலும் இந்த பாடலின் வீடியோ விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.