இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சினை! சினிமாவையே விட்டு போகும் பிரபல இயக்குனர்? வெளியான பல உண்மை
பிரபல இயக்குனர் மிஷ்கின் சில காலங்களுக்கு பின்பு சினிமாவை விட்டுப் போவதாகவும், மியூசிக் மட்டும் தனக்கு போதும் என்று வெளிப்படையாக பேசியுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
இயக்குனர்
நரேன் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின்.
இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
தற்போது பிசாசு 2 திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் ரிலீஸிற்கும் தயாராகவே உள்ளது.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை உள்ள 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்துவிட்டார். ஆனால் இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன தெரியாமல் இருந்தது.
ஆனால் தற்போது இவர்களின் பிரிவிற்கு சினிமா தான் என்றும், அதன் மீது தீராத காதல் கொண்டிருந்ததால், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் இருந்தது. இதன் காரணமாகவே இருவரும் ஒருமனதாக பேசி பிரிந்துவிட்டார்களாம்.
இளையராஜாவுடன் மனக்கஷ்டம்
இளையராஜாவுடன் வருத்தம் ஏற்பட்டதையும் அவரது பாடல்களை அவ்வளவு உயிருக்கு உயிராக நேசித்துள்ளதையும் தற்போது கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தான் சினிமாவினை விட்டு சில வருடங்களில் விலகிவிடுவதாகவும், மியூசிக் மட்டுமே தனக்கு போதும் என்றும் கூறியுள்ளதுடன், ஏ.ஆர்.ரஹ்மான், அனிரூத், இளையராஜா என பலரையும் குறித்து பல விடயங்களை நேர்காணலில் பேசியுள்ளார்.