மட்டன் கிரேவி இப்படி செஞ்சு சாப்பிடுங்க! வாழ்நாளில் இதன் சுவை மறக்காது
Healthy Food Recipes
By Kishanthini
பொதுவாக சிக்கனுக்கு அடுத்தப்படியான பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது.
மட்டன் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.
அந்தவகையில் தற்போது மட்டனை வைத்து சுவையான மட்டன் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

image -geekrobocook
தேவையானவை
- மட்டன் - கால் கிலோ
- சோம்பு - ஒரு டிஸ்பூன்
- சீரகம் - ஒரு டிஸ்பூன்
- முந்திரி - 4
- கசகசா - ஒரு டிஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- கறிவேப்பிலை - ஒரு டிஸ்பூன்
- நறுக்கி தக்காளி
- இஞ்சி - பூண்டு விழுது
- மிளக்காய்த்தூள்
- மஞ்சள்தூள் - சிறிதளவு
- மல்லித்தூள் - 2 டிஸ்பூன்
- கரம் மசலாத்தூள் - கால் டிஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித்தழை - ஒரு டிஸ்பூன்
செய்முறை
- மட்டன் கிரேவி
தலா ஒரு டிஸ்பூன் சோம்பு, சீரகம், 4 முந்திரி, அரை டிஸ்பூன் கசகசா ஆகியவற்றை லேசாக வறுக்கவும்.
- இதனுடன் ஒரு கைப்பிடியளவு சின்ன வெங்காயம், தலா ஒரு டிஸ்பூன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்
- . குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு டிஸ்பூன் சோம்பு, ஒரு டிஸ்பூன் கறிவேப்பிலை சேர்தது தாளித்து, 50 கிராம் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கி தக்காளி , ஒரு டிஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
-
இதனுடன் நன்கு அலசிய கால் கிலோ மட்டனைச் சேர்த்து, 2 டிஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு மிளக்காய்த்தூள்,சிறிதளவு மஞ்சள்தூள், கால் டிஸ்பூன் கரம் மசலாத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
-
பிறகு அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 அல்லது 5 விசில் விட்டு இறக்கவும்.
- ஆவி விட்டது திறந்து தண்ணீர் சுண்டமால் இருந்தால் கிரேவி பதம் வரும் வரை புரட்டி கொத்தமல்லித்தழைத் தூவி இறக்க விட்டால் மட்டன் கிரேவி ரெடி!
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US