'ஈரலில்' கோழி ஈரல் vs ஆட்டு ஈரல் எதை உண்பது உடலுக்கு நன்மை தெரியுமா?
எப்போதம் வீட்டில் அசைவ உணவு சமைத்தால்எல்லோரும் விரும்பி உண்பார்கள். அதிலும் பெரும்பாலானோல் ஈரல் வாங்கி வந்து சமைப்பார்கள்.
ஈரலில் பல வைட்டமின்களும் பல வெறு சக்திகளும் உள்ளது. தற்போது இருப்பவர்களில் பெரும்பாலானோர் சாப்பிடுவது கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் தான்.
இவற்றில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும் இதை ஒரு சிலர் கோழி ஈரல் தான் நன்மை ஆட்டு ஈரல் தான் நன்மை என கூறுவார்கள். இதில் எது உடலுக்கு மிகவும் நன்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோழி ஈரல் vs ஆட்டு ஈரல்
கோழி ஈரல்: இதில் டலுக்கு தேவையான இரும்புச்சத்து காணப்படுகிறது. நம் உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க ஈரல் உண்ணலாம்.
இது ரத்தசோகை வராமல் தடுக்க உதவுகிறது. இரும்புச்சத்த அதிகமாக இருந்தாலும் இதில் வைட்டமின் ஏ, பி12, ஃபோலேட் ஆகிய சத்துக்களும் காணப்படுகின்றது.
ண்பார்வை குறைவை இது தடுக்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதன் மூலம் எளிதில் தொற்றுநோய் தாக்காமல் தப்பிக்கலாம்.
ஆட்டு ஈரல்: ஆட்ட இரலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இதை உண்பதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். நரம்பு மண்டலம், எலும்புகள், பற்களை பேண தேவையான தாதுக்கள் ஆட்டு ஈரலில் இருக்கின்றன.
உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் சேதமாகும். அதை சரிசெய்யும் வைட்டமின் ஏ, ஃபோலேட் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் உள்ளன.
எது சிறந்தது? அந்த வகையில் பார்த்தால் கோழி ஈரலை விட ஆட்டு ஈரல் மிகவும் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரலில் கொழுப்பு அதிகம் உள்ளதால் அளவாகவே உண்ண வேண்டும்.
இதை ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம். மேலும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகம் கோளாறு, தசை சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் ஆகியோர் ஆட்டு ஈரலை எடுத்துக்கொள்ள கூடாது.
அப்படி கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |