ஆட்டு இறைச்சி மற்றும் மீன் சாப்பிட்ட பெண் மரணம்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்கள்!
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் காணுவப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி( 45). இவர்கள், இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சுமதி வில்லியனூர் சந்தையில் இட்லி மாவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த இரண்டு வருடமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி மதியம் ஆட்டு இறைச்சி மற்றும் மீன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.
இதன்பின், சிறிது நேரத்திற்கு உள்ளாகவே வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுமதியை வில்லியனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு திரும்பிய பெண்மணி இரவு உறங்கிய நிலையில், மறுநாள் காலையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகவே, இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், சுமதி சாப்பிட்ட ஆட்டு இறைச்சி மற்றும் மீன் இறைச்சி செரிக்காமல் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.