மிளகு நீர் போதும் அதிசயம் நடக்கும்! தமிழ்க் கடவுளுக்கு எடுக்கும் சஷ்டி விரத நாட்களில் மறந்தும் தவறு செய்யாதீர்கள்
murugan
kantha sasti viratham 2021
By Nivetha
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த விரதம் சஷ்டி விரதம்.
இந்த விர நாட்களில் சிலர் ஒரு வேலை உணவும், சிலர் சைவமாகவும், சிலர் மிளகு நீர் மாத்திரம் 6 நாட்களும் எடுத்து அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப விரதம் எடுப்பார்கள்.
இந்த காலக்கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்று பார்க்கலாம்.
- கந்தசஷ்டி விரதம் ஆரம்பிப்பது முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான உணவினை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.
- எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம்.
- கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
- ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரம் குளிக்க வேண்டும்.
- தினமும் காலை மாலை வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு பூ வைத்து தீபம் ஏற்றி கற்பூரம் காட்ட வேண்டும்.
- காலை அல்லது மாலை கந்த சஷ்டி கவசம் படிக்கச் வேண்டும். மாலை வீட்டில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
- முடிந்த வரை தினம் ஒருவருக்கு எச்சில் படாமல் செய்த உணவை தானம் செய்ய வேண்டும். சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது அவசியம்.
- பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள்.
- சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது. மது புகை கூடாது. தம்பதியர் உறவு கொள்ளக்கூடாது.
- கோபமாக பேசக்கூடாது.
- இரவு தரையில் கம்பளம் விரித்து தூங்கவேண்டும் கட்டில் மெத்தை கூடாது.
- முடிந்த வரை காலனி தவிர்ப்பது நலம். யாரையும் திட்டக் கூடாது.
- சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.
- மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.
- அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து முடிந்தால் மாவிளக்கு போடுங்கள் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.
- வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும்.
- வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கைகூடி நல்ல வேலை கிடைக்கவும், கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
- எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். திருமணம் கை கூடி வரும். எதிரிகள் தொல்லை ஒழியும். சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US