குழந்தைகளை அதிகமாக தாக்கும் பொன்னுக்கு வீங்கி! அறிகுறிகள் என்னென்ன?
அம்மைக் கட்டு நோய் குழந்தைகளை அதிகமாக தாக்கும் நோயாக காணப்படுகின்றது. இதன் அறிகுறிகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அம்மைக்கடடு அல்லது பொன்னுக்கு வீங்கி நோய்
அம்மைக்கட்டு நோய் அல்லது தாளம்மை அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும்.
அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது.
தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.
செவி மடலுக்குக் கீழ், உள் அமைந்து உள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கம் அடைவதால் வலியுடன் கூடிய உப்பல் கன்னத்தில் தோன்றுகிறது.
மனித உமிழ்நீர்ச்சுரப்பிகள் மூன்று வகைப்படும். அவை தாடையடிச் சுரப்பி, நாக்கு அடிச்சுரப்பி, செவியோரச் சுரப்பி என்பன.
பொன்னுக்கு வீங்கி ஏற்பட முக்கிய காரணம்
பொன்னுக்கு வீங்கி நோய் ஏற்பட முக்கிய காரணம் வைரஸ் ஆகும். இது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவருக்கு உமிழ் நீர் மற்றும் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் கிருமிகள் மூலம் எளிதில் பரவும்.
மேலும் இது வைரஸ் நோயினை ஏற்படுத்திய பிறகு 14-18 நாட்கள் வரை அறிகுறிகள் காணப்படும்
நோய் அறிகுறிகள்?
இந்த நோய் பொதுவாக பள்ளிப் பிள்ளைகளையும் இளம் வயதினரையும் தாக்கவல்லது. மருத்துவப் பரிசோதனையின் மூலம் நோயை நிர்ணயம் செய்யலாம்.
சில வேளைகளில் கன்னப் பொந்தின் மென் சவ்வு ( Buccal Mucosa ) பரிசோதனை, மற்றும் இரத்தத்தில் IgM பரிசோதனைகள் தேவைப்படலாம்.
காய்ச்சல்
தலைவலி
பலவீனம்
பேரோட்டிட் சுரப்பியின் வீக்கமும் வலியும்
கழுத்தில் நகை அணிவது எதனால்?
இந்நோய்க்கான காரணமும் சிகிச்சைக்கான மருந்தும் அறியப்படாத அக்காலத்தில் இதனை அம்மை நோய்களில் ஒன்றாக, நமது முன்னோர்கள் கருதினர்.
சுகாதார விதிகளைக் கெடுபிடியாகக் கடைபிடிக்கச் செய்தனர். தாயாரின் தங்கச்சங்கிலியாகிய பொன் ஆபரணத்தை நோய்வாய்ப்பட்ட சிறுவர் கழுத்தில் போடுமாறு வலியுறுத்தினர்.
இதன் காரணமாக அம்மைக்கட்டு நோய்க்கு, பொன்னுக்கு வீங்கி என்ற பெயர் நிலைத்து விட்டது.
கை வைத்தியம் என்ன?
செந்சந்தணம் மற்றும் பனங்காயின் சாறு என்பன கன்னப்பகுதியில் பூசப்படுகின்றன. பன்னீர் குடிப்பதற்குக் கொடுக்கப்படுகின்றது.
நோயாளி தனிமைப் படுத்தப்படுவதுடன் வெளியே செல்ல அனுமத்திக்காமை என்பனவும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வேப்பிலைகளை எடுத்து மஞ்சள் சேர்த்து நீர் விட்டு அரைத்து கன்னங்களில் ஏற்படும் பொன்னுக்கு வீங்கியில் பூசி வந்தால் பொன்னுக்கு வீங்கி குறையும்.
கடுக்காயை நன்றாக நீர் விட்டு உரசி எடுத்து அந்த விழுதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் பொன்னுக்கு வீங்கி குறையும்.
சிறிதளவு கருஞ்சீரகம் எடுத்து வெற்றிலைச்சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கத்தில் பற்று போட்டு வந்தால் கன்னத்தில் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி குறையும்.
இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?
பெரும்பாலும் பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்கள் மனித உயிருக்கும் ஆபத்தாக ஆராய்கிறார், ஆனால் வழக்குகள் தீவிர சிக்கல்களுக்கும் எந்தெந்த பகுதிகளில் கணிசமான உள்ளன.
Paramyxovirus கணைய அழற்சி காரணமாக, கணையம் மீது சேதத்தை விளைவை ஏற்படுத்தும். பொன்னுக்கு வீங்கி மூளைக்காய்ச்சல் மற்றொரு அடிக்கடி சிக்கல் சரியான நேரத்தில் சிகிச்சை ஒரு சாதகமான நோய்க்குணமடையும் தன்மையைக் கொண்டிருப்பதற்கான கருதப்படுகிறது.
Oophoritis (கருப்பை வீக்கம் பெண்கள் காணப்பட்ட).
தைராய்டிட்டிஸ் (தைராய்டு பிறழ்ச்சி).
செவிநரம்பு தோல்வி.
கீல்வாதம்
இதயத்தசையிழப்பு
நெஃப்ரிடிஸ்
மருந்துகள் என்னென்ன?
பெல்லடோனா
தாளம்மையினால் காய்ச்சல், நரம்புக் கோளாறு, உமிழ் நீர் கோளங்களில் வீக்கம், கன்னம் சிவந்து, வீங்கி, மிகவும் வலியுடன் இருக்கும்.
வலதுபுறம் படுக்க இயலாத வலி, துடிக்கும் தலைவலி மற்றும் சன்னி போன்ற நிலைகளில் இம்மருந்து நல்ல பலனைக் கொடுக்கும்.
மெர்க்கூரியஸ்
இது தாளம்மைக்கு முக்கியமான மருந்து. கன்னத்தின் அடிப்பகுதியிலும் தாடையிலும் வீங்கி, மென்மையான தோற்றம் இருக்கும்.
லேசானக் காய்ச்சல் இருக்கும், கெட்ட நாற்றம் வீசும் நிலைகளில் இம்மருந்தைக் கொடுக்க குணமாகும்.
பல்சடில்லா
தாளம்மை வைரஸ், உமிழ் நீர் சுரப்பிகளிலிருந்து கிளம்பி நிணநீர் சுழற்சி மூலமாக (Lymphatic circulation) பிற உறுப்புகளைச் சென்றடையாமல், (Prevents metastasis) குறிப்பாக ஆணின் விதை அல்லது பெண்ணின் சினைப் பையை அடைந்து தாக்கி மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தாமல் தடுக்க வல்ல மருந்து இது.
ருஷ்-டாக்ஸ்
தாளம்மை நோய் நீங்கிய பிறகு, இரண்டாம் நிலைத் தொற்றாக (Secondary infection) அக்கி (Erisipelas) குடற்காய்ச்சல், பேதியாதல், கடுமையான உடல் வலி ஆகியவைகள் ஏற்படாமல் தடுக்க வல்லது.
இவைகளைத் தவிர "பைலோகார்பின்" "கோனியம்" மற்றும் "லெகெசிஸ்" போன்ற மருந்துகளும் தேவைப்படலாம்.