Viral Video: பிள்ளையாருக்கே நடந்த சோதனை நடந்தது என்ன?
மும்பையில் இருக்கும் பணக்கார பிள்ளையார் கோவில்ல பக்தர்களின் வழிபாடு தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இந்தியாவில் பணக்கார விநாயகர் கோவில் என்று சொல்லப்படும் கோவில் தான் லால்பக்சா ராஜா விநாயகர் கோவில்.இங்கே 20 அடி உயரத்தில் கம்பீரமாக அமர்ந்து விநாயகர் அருள்பாலிக்கிறார்.
அதனால் எந்த விஷேஷம் என்றாலும் ஆடம்பரமாகவே இந்த கோயிலில் பூஜைகள் நடைபெறும். விநாயகர் அலங்காரம் முதல் எல்லாமே பக்தர்களின் கண்களை கவரும் வகையில் மிக பிரமாண்டமாக செய்யப்படும்.
இந்த கோவில் பிள்ளையார் தங்க, வைர ஆபரணங்களால் லால்பக்சா ராஜா ஜொலிக்கிறார். அம்பானி குடும்பம் கூட 20 கிலோ தங்க கிரீடத்தை விநாயகர் சதூர்த்திக்காக காணிக்கையாக கொடுத்தனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிலையில் தான் விநாயகர் பாதங்களை தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு பாதம் விஐபி தரிசனத்துக்காகவும், இன்னொரு பாதம் எளிய மக்கள் வழிபடுவதற்காகவும் பிரித்துவிடப்பட்டுள்ளது.
எளிய மக்கள் விநாயகர் வழிபடும் வழி கூட்டம் அலைமோதும் நிலையில், விஐபி தரிசனம் செய்பவர்கள் ஜாலியாக விநாயகருக்கு அருகிலேயே நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சியடைகின்றனர்.
ஒரு பக்கம்கூட்டம் அலை மோதுவதையும், இன்னொரு பக்கம் பணக்காரர்கள் விளையாடுவதையும் வீடியோ எடுத்துப் போட்டு மக்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Two Indias ? #LalbaugChaRaja pic.twitter.com/HXqyDs9pM6
— The Cinéprism (@TheCineprism) September 12, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |