ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட நபர்- கண் இமைக்கும் நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்
ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட நபர் திடீரென கீழே விழுந்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிய போலீஸின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உயிரைக் காப்பாற்றிய காவலர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மும்பை, பாந்த்ரா டெர்மினல் ஸ்டேஷனில் ஒருவர் ஓடும் ரயிலில் வேகமாக ஓடி வந்து ஏற முயற்சி செய்தார். அப்போது, பிளாட்பாரத்தில் திடீரென அவர் கால் தவறி விழுந்தார். அப்போது, பணியில் இருந்த RPF காவலர் ஒருவர் விரைந்து ஓடி வந்து அந்த நபரை ரயிலுக்கு அடியில் மாட்டாமல் உயிரை காப்பாற்றினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, இது போல் ஓடும் ரயிலில் யாரும் ஏற முயற்சிக்க வேண்டாம். உங்கள் உயிர் விலைமதிப்பற்றது. சிந்தித்துப் பாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.