சிக்கன் கறியில் செத்த எலி; சாப்பிட்டவருக்கு நேர்ந்த கதி
மும்பை உணவகம் ஒன்றில் இறைச்சியை கடித்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சியானது அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள உணவகத்திற்கு வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்தனர், ஆட்டிறைச்சி மற்றும் ஒரு சிக்கன் கறி.
@MumbaiPolice Rat found in our gravy at #papaPanchodadhaba near Pali naka Bandra West . No manager or owner is ready to listen . We called police and 100 as well . No Help yet . @mumbaimirror @TOIMumbai pic.twitter.com/YRJ4NW0Wyk
— Stay_Raw (@AMINKHANNIAZI) August 13, 2023
உணவு வந்ததும் கோழிக் கறியை சாப்பிடத்தொடங்கியவர் ஒரு துண்டு இறைச்சியை சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிய வந்தது, அவர் சாப்பிட்டது கோழி இறைச்சி இல்லை எலி என்று.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ஹோட்டல் மேலாளரிடம் புகார் அளித்தனர். மேலாளர் "தெளிவற்ற பதில்களை அளித்ததால்" பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவரை பொலிசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |