நான் சீக்கிரமா இறந்துவிடுவேன்.. இறப்பை முன் கூட்டியே கணித்த பெண் மருத்துவர் பலி! கண்ணீர் பதிவு
பெண் மருத்துவர் ஒருவர் தன்னுடைய இறப்பை முன்கூட்டியே கணித்து தன்னுடைய கடைசி குட் மார்னிங் என பேஸ்புக்கில் பதிவுசெய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் டாக்டர் மனிஷா ஜாதவ்(51). என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதன்பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், தன்னுடைய உடல் நாளுக்கு நாள் மோசமாகி வருவதை அறிந்து அவர் விரைவில் தான் இறந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது.
இதனையடுத்து, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுதான் எனது கடைசி குட்மார்னிங் என்று பதிவு செய்தார்.
இந்த பதிவு செய்த 36 மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தனது பேஸ்புக் பதிவில் “நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.
எனது கடைசி காலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இதன்பின்னர், உங்களை நான் சந்திக்க முடியாது. எல்லோரும் கவனமாக இருங்கள்.
எனது உடல் அழிந்து விடும். ஆனால் என் ஆன்மா அழியாது” என உருக்கமாக கூறியிருந்தார். இவர் சாகும் முன்பு வெளியிட்ட உருக்கமான பேஸ்புக் பதிவால் பலரும் வேதனையில், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

