Multivitamin மாத்திரைகள் எதற்காக? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
நாம் தினசரி உட்கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதில் குறைபாடு ஏற்படும் போது ஊட்டசத்து குறைபாடு உண்டாகும்.
இதை சரிசெய்வதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் மிக முக்கியமானது Multivitamin Tablet.
பல வைட்டமின்களின் கலவையாக காணப்படும் Multivitamin மாத்திரைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக்கொள்கின்றனர்.
ஊட்டச்சத்து குறைபாடு, புரோட்டீன் குறைபாடு, தோல் நோய்கள், மைக்ரேன் தலைவலி, உடலுக்கு தேவையான சத்துக்களை இது சரிசெய்ய உதவுகிறது.
உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும், வைட்டமின் ஏ மற்றும் பி3 குறைபாடுகளை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
அதீத காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு Multivitamin மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், காரணம் உடல் சோர்வை போக்குவதற்காக.
வயதான நபர்களுக்கு செரிமானம் ஆவது குறைவாக இருக்கும் என்பதாலும் Multivitamin வழங்கப்படுகிறது, சர்க்கரை நோயாளிகள் சோர்வுறாமல் இருப்பதற்காகவும் Multivitamin மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது,
தலைவலி
வாந்தி
மயக்கம்
களைப்பு
எரிச்சல் உணர்வு
நச்சுத்தன்மை
இதுபோன்ற பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.
இதுதவிர மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் அசௌகரியம் இருந்தாலும் மருத்துவரை பார்க்கவும்.
இதில் ஏதேனும் அலர்ஜி ஆகக்கூடிய மருந்துகள் இருந்தாலும் மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்கவும்.
மேலும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது, மருத்துவர் பரிந்துரைத்த நாட்களுக்கு தவறாமல் எடுக்கவும், சுயமாக மருந்துகள் எடுப்பதை நிறுத்தவும் கூடாது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நபர்களுக்கு இம்மாத்திரைகள் தேவைப்படாது.
வெயிலில் அலையும் ஆண்கள் மற்றும் இளைஞர்கள் தேவையில்லாமல் இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மது அருந்தும் நபர்கள். கல்லீரல் பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனை இருக்கும் நபர்கள் மறந்தும்கூட சாப்பிட வேண்டாம்.
எச்சரிக்கை
எந்தவொரு மருந்தையும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |