பளிச்சென்ற முக அழகுக்கு முல்தானி மெட்டி!
By Sinduja
சரும அழகை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு அழகு சாதனப் பொருட்களை தேடி தேடிப் போய் வாங்குவோம்.
என்னதான் பலவிதமான க்ரீம்கள், ஸ்க்ரப் வகைகள் வந்தாலும் இயற்கையான அழகு சாதனப் பொருட்களுக்கென்று என்றுமே தனி இடம் உண்டு.
அந்த வகையில் ஒரு வகை களிமண் என்று கூறப்படும் முல்தானி மெட்டி என்பது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதில் முக்கிய இடத்தை பெறுகின்றது.
இதில் கல்சியம், சிலிக்கா, இரும்பு உட்பட பல கனிமங்கள் உள்ளடங்கியுள்ளன. இது முற்றிலும் ஒரு இயற்கைப் பொருள் என்பதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாதது. முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கும்.
இதிலுள்ள ஆரோக்கிய பலன்கள்
- முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்துக்கு பூசி வந்தால் ஏதேனும் ஒவ்வாமைகள் இருந்தால் சரியாகிவிடும்.
- புண்களுக்கு மேல் இதை பேஸ்ட்டாக பயன்படுத்தினால் சில மணி நேரங்களிலேயே குணமாகும். இது ஒரு கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.
- வீக்கங்களை குறைக்கக் கூடியது.
- இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- உடலிலிருந்து தேவையற்ற செல்களை அகற்ற உதவுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US