முல்லை வீட்டில் நடந்த விஷேசத்தில் கலந்து கொண்ட நடிகை சுஜிதா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்… தீயாய் பரவும் புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. தமிழில் போலவே தெலுங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று தான்.
தெலுங்கில் ‘வடி நம்மா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில், நடிகை பிரியங்கா நாயுடு நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா நாயுடுவிற்கும், சீரியல் நடிகர் மதுபாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகை சுஜிதா கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.