திருமண நாளில் வந்த ஒப்பந்தம்.. வாயடைத்து போன மணமகள்- மாப்பிள்ளையின் கோரிக்கை என்ன?
திருமணம் நடக்கும் நாளில் கிரிக்கட் பற்றிய ஒப்பந்தத்துடன் வந்து மாப்பிள்ளையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புதிதாக திருமண வாழ்க்கையில் இணையும் தம்பதிகள் அவர்வர்களின் வாழ்க்கையில் அதுவரை காலமும் செய்து வந்த பல விடயங்களை தன்னுடைய துணைக்காக தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
என்ன தான் இளைஞர்களாக இருக்கும் பொழுது நண்பர்களுடன் சுற்றித்திரிந்தாலும், திருமணம் செய்த பின்னர், அப்படி ஆண்கள் வெளியில் சுற்றித்திரிவதை பெண்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இல்லாமல் வெளியில் சென்றாலும், அதுவொரு பிரச்சினையாக மாறி விடும். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை பார்த்திருப்போம்.

திருமண நாளில் போடப்பட்ட ஒப்பந்தம்
இந்த நிலையில், இதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில், இளைஞர் ஒருவர் அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் திருமண நாளில் ஒப்பந்தமொன்றை கொடுக்கிறார்.
அதில், “ தோனி மற்றும் CSK கிரிக்கட் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதி வேண்டும். ஏழு ஃபெராக்களுக்கு முன் ஒப்பந்தம்..” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை மணமகள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவர் முன்னிலையிலும் படித்து காட்டி அவர்களின் திருமண நாளை மறக்க முடியாத கிரிக்கட் நாளாக மாற்றியுள்ளார்.
இந்த காணொளி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. “ இப்படியொரு ஒப்பந்தமா?” எனக் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |