ரொபர்ட் மாஸ்டர் கட்டிய தாலியுடன் புன்னகைக்கும் வனிதா- பட காட்சியாக இருந்தாலும் இப்படியா?
ரொபர்ட் மாஸ்டர் கட்டிய தாலியுடன் புன்னகைக்கும் வனிதாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார்.

இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்கு ஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்த வனிதா கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் பிரிந்து விட்டார்.
தாலியுடன் நிற்கும் வனிதா
இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படத்திற்கான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். 40 வயதை தாண்டிய பெண்ணொருவர் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதாவிற்கு இந்த திரைப்படம் என்ன மாதிரியான வரவேற்பை கொடுக்கப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அத்துடன் அதில், ரொபர்ட் மாஸ்டர்- வனிதாவின் திருமண காட்சிகள் உள்ளன. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை குவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரசிகர் ஒருவர், “ முதல் தடவை திருமணம் செய்து கொள்வது போன்று உள்ளது உங்களின் ரியாக்ஷன்...” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        