விஷம் துப்பும் நாகப்பாம்பின் பதறவைக்கும் காணொளி! ஏன் இவ்வாறு செய்கின்றது?
மொசாம்பிக் விஷம் துப்பும் நாகப்பாம்பொன்று, விஷத்தை வேகமாக துப்பும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே தலைதெறிக்க ஓடுபவர்கள் ஏராளம். அதனால் தான் பாம்மை கண்ணடால் படையும் நடுங்கும்' என்பார்கள்.

உலகில் உள்ள கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் பட்டடியலில் நாகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. குறிப்பாக மொசாம்பிக்கில் காணப்படும் ஆப்பிரிக்க நாகப்பாம்புகள் என்ற இனத்தை சேர்ந்த பாம்புகள் விஷத்தை துப்பும் இயல்பு கொண்டவவையாக அறியப்படுகின்றது.
இந்த வகை பாம்புகள் எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் நோக்கிலும் இரையை கொள்ளும் நோக்கிலும் இவ்வாறு விஷத்தை தூரத்தில் இருந்து துப்பும் தந்திரத்தை பயன்படுத்துகின்றது.

இவை துப்பும் விஷம் கண்களில் பட்டால் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், மனிதர்களுக்கு பார்வையிழப்பு ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.
Spitting cobra என அறியப்படும் விஷத்தை உமிழும் நாகப்பாம்பு வகை ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மொசாம்பிக் விஷம் துப்பும் நாகப்பாம்பொன்று, விஷத்தை வேகமாக துப்பும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |