ஆன்லைனில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த நபர்... பார்சல் மூலம் வந்த இன்ப அதிர்ச்சி
அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூபாய் 13,000 மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும் அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்த அந்த வாடிக்கையாளர் அதிர்ந்து போயுள்ளார்.
உடனே தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை பலர் வைரலாக்கி வருகின்றனர்.
மே 10ஆம் தேதி, 396 ரூபாய் மதிப்புள்ள மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு ரூ. 13,000 மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.