மகனுக்கு பீஸ் கட்ட தற்கொலை செய்த தாய்... பகீர் காணொளி
மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்டமுடியாமல் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ள காட்சி பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பேருந்து முன் பாய்ந்து தற்கொலை
சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட்டை சேர்ந்தவர் பாப்பாத்தி(39). இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகின்றார்.
மகள் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் நிலையில், மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
இதில் மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்டவேண்டியிருந்ததால், அக்கம் பக்கத்தினரிடம் கடன் கேட்டுள்ளார். கிடைக்கவில்லை என்பதால் வேலைக்கு செல்லாமல் கவலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், பாப்பாத்திக்கு ஒருவர் விபரீத யோசனை கொடுத்துள்ளார். இதனைக் கேட்ட பாப்பாத்தி கடந்த 28ம் தேதி தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொலிசார் விபத்தில் உயிரிழந்ததாக நினைத்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சி ஒன்று அதிர்ச்சி கொடுத்துள்ளது. தானாக சென்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை தற்கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், தனது பிள்ளைகளின் எதிர்கால தேவைக்காக அரசு நிவாரண நிதி தொகை கிடைக்கும் என்று பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
A mother kills herself to meet son’s education expenses ?
— Arvind Gunasekar (@arvindgunasekar) July 17, 2023
Being misled by someone, a mother, working as ‘safai karmachari’ at Collector’s office in Salem, kills herself by falling into a bus to get financial assistance from the Govt to pay son’s college fees of 45,000.
A… pic.twitter.com/vzlcC6boWG
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |