தாய் செய்த மோசமான காரியம்! சுயநினைவை இழந்த குழந்தை உயிரிழப்பு
இந்திய மாநிலம் தமிழகத்தில் திருவள்ளூரில் வீட்டில் சேட்டை செய்த 3 வயது குழந்தையை தாய் அடித்துள்ளதால், சுயநினைவினை இழந்து குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை அடித்த தாய்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சதீஷ்... இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு மணிகண்டன், சஞ்சனா, கிஷோர் என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர்.
இதில் கிஷோர் பயங்கர சுட்டித்தனத்துடன் சேட்டையும் செய்து வந்துள்ளனர். இதனை அவதானித்த தாய், கோபத்தினை அடக்கிக் கொள்ள முடியாமல் அந்த 3 வயது சிறுவனை குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் குறித்த சிறுவன் சுயநினைவினை இழந்து, மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். மேலும் அக்குழந்தை சிகிச்சை பலனிறி உயிரிழந்துள்ளது.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.