18 மாத குழந்தைக்கு பூச்சியை உணவாக கொடுத்த கொடுமை! காரணம் என்ன தெரியுமா?
கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைக்கு பூச்சியை உணவாக சேர்த்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு பூச்சி உணவு
கனடாவைச் சேர்ந்த உணவு எழுத்தாளர் ஒருவர் தனது குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற பூச்சியை சேர்த்துள்ளார்.
டொராண்டோவைச் சேர்ந்த டிஃப்பனி லே, தனது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, அவர் தனது 18 மாத குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற ஒரு வகை பூச்சியை சேர்க்க முடிவு செய்தார். குழந்தைக்கு புரத சத்து கிடைக்கவும், குடும்பத்தின் மளிகைக் பொருட்களின் கட்டணத்தை குறைக்கவும் இவ்வாறு பூச்சிகளை உணவில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் " உணவு எழுத்தாளர் என்ற முறையில், நான் எப்பொழுதும் பூச்சிகளை உண்ணுதல் உள்ளிட்ட எதையும் முயற்சி செய்து வருகிறேன்.
தேள் உள்ளிட்ட பல பூச்சிகளை உணவில் சேர்த்து வருவதால், விலைவாசி உயர்வை சமாளிப்பதாகவும், கிரிக்கெட் பூச்சி தின்பண்டங்கள், கிரிக்கெட் புரோட்டீன் பவுடர் மற்றும் முழு வறுத்த கிரிக்கெட்டு பூச்சிகள் என இவ்வாறு புரோட்டீன் நிறைந்த உணவினை கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் வீனஸ் கலாமியின் கூற்றுப்படி, மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 மாத வயதை எட்டியவுடன் பூச்சிகளை ஊட்டலாம் என்றும் டிஃப்பனி லே குறிப்பிட்டார்.