வலியால் தாயிடம் கதறிய மகள்... 2 வருடமாக தந்தை செய்த கொடுமை அம்பலம்
மலேசியாவில் வளர்ப்பு மகளை 105 முறை வன்கொடுமை செய்த தந்தைக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனையை வழங்கியுள்ளது. மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்த நிலையில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில் 2016ம் குறித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவதாக திருமணம் செய்த நபர் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது 12 வயது வளர்ப்பு மகளைக் கடந்த 2018, ஜனவரி 5ம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24ஆம் தேதி வரை 105 முறை வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் எல்லாம் சிறுமியை தொந்தரவு செய்த அந்நபர் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் அடித்தும் உள்ளார்.
இந்நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுமி, தனது அம்மாவிடம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது இரண்டாவது கணவர் மீது உடனடியாக புகாரளித்துள்ளார்.
அந்த நபரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ள நிலையில், நேற்று இவ்வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, 24 பிரம்படிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.