Viral Video: அம்மா பயமா இருக்கு... குட்டி யானைக்கு சொல்லிக் கொடுக்கும் தாய்
புத்திசாலித்தனமான உயிரினங்களாக யானையை குறிப்பிடலாம், மனிதர்களை போலவே யானைகளும் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கின்றது.
பெண் யானையும் மனித தாயைப்போல பாசமாக இருக்க கூடியது. அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் தாய் யானை தனது குட்டிக்கு நிற்க கற்றுகொடுக்கிறது.
latest sightings என்ற யூடுயூப் சேனலில் விலங்குகள் தொடர்பான வியப்பை அளிக்கும் விதத்தில் ஆசிரியமான வீடியோவை வெளியிடுவார்கள்.
தற்போது இந்த சேனலில் ஒரு யானை தனது குட்டிக்கு நிற்கவும் நடக்கவும் கற்றுகொடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
காட்டு பகுதியில் வழிகாட்டியான பணிபிரியும் 31 வயதான பிரட் , சஃபாரிக்கு சென்றபோது இந்த வீடியோவை பதிவு செய்ததாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் பிறந்த குட்டியானை நிற்க முடியாமல் கீழே விழுகின்றது. பொதுவாக விலங்குகள் பிறந்தவுடனே கால்களால் நிற்கும். இந்த குட்டி நிற்க முடியாமல் மீண்டும் மீண்டும் தரையில் விழுந்தது.
இதனை கண்ட தாய் யானை மிகவும் மன வருத்தத்துடன் குட்டி யானை அருகில் வந்து தனது தும்பிக்கையால் தூக்கி நிறுத்த செய்கிறது.
மிகவும் சிரமப்பட்ட குட்டியானையை தாய் யானை தனது கால்களால் நிற்க வைக்க உதவுகிறது. இறுதியில், குழந்தை யானை எந்த ஆதரவும் இல்லாமல் தானாகவே எழுந்து நிற்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |