இறந்த தாயை 10 வருடமாக ப்ரீசரில் வைத்த மகள்; விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவை சேர்ந்தவர் யூமி யோஷினோ( 48). இவர் நகராட்சி வீட்டு வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் தங்கியுள்ள நிலையில், இம்மாத வாடகையை அவர் தரவில்லை என்று கூறி, யோஷினா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே, அவரது குடியிருப்பு பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில், ப்ரீசரில் இருந்த பெண்ணின் உடலை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
உடனே, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாயின் உடலை யோஷினோ மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக யோஷினோவின் தாயார் இறந்துவிட்ட நிலையில், தாய் இறந்த செய்தியை பிறர் அறிந்தால் வீட்டினை விட்டு வெளியேற சொல்வார்கள் என்று எண்ணி யாரிடமும் கூறவில்லை.
அந்த வீட்டின் பெயர் அவரது தாயரின் பெயரிலேயே குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனாலே வெளியேறவில்லை என கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.