கொரோனாவில் இருந்து மீண்டு தாய் மகன் திடீர் மரணம்- சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!
கொரோனா வைரஸ் ஆனது இந்தியா முழுவதும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்திலும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தாய், மகன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மற்றும் அவரது தாய் வள்ளியம்மாள் இருவரும் உடல்நிலை கோளாறு காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்கொண்ட பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு இருவரும் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி 10 நாட்களுக்கு முன் தான் தாயும், மகனும் வீடு திரும்பினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென கணேசன் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததைப் பார்த்த அவரது தாய் வள்ளியம்மாளும் அதிர்ச்சியடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதனால், தாய், மகன் கொரோனா பாதித்தவர்கள் என்பதால் உறவினர்கள் மட்டுமே அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
இச்சம்பவம் ஆரணி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைவரும் விழிப்புணர்வுடன் முககவசம் அணிவதையும், தடுப்பூசி போட்டுக்கொள்வதையும் பயன்படுத்திக்கொள்ளவெண்டும்....