காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறீர்களா? கண்களைப் பாதிக்கும் இந்த தவறுகளை செய்யாதீர்!
தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காண்டாக்ட் லென்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது வெறும் அழகுக்கான தேர்வாக மட்டுமல்லாமல், மூக்குக் கண்ணாடி அணிவதால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்து, அன்றாடச் செயல்பாடுகளை எளிதாக்கும் ஒரு வசதியான மாற்றாகவும் காணப்படுகின்றது.
ஆனால், கண்ணின் மேற்பரப்பில் நேரடியாகப் பொருத்தப்படும் இந்த மெல்லிய லென்ஸ்களைப் பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டினால், அது கண்களின் ஆரோக்கியத்தையே வலுவாக பாதிக்க வாய்ப்புள்ளது.

கண்களைப் பாதிக்கும் தவறுகள்
லென்ஸைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது, நீண்ட நேரம் அணிந்திருப்பது, பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டிப் பயன்படுத்துவது போன்ற சிறிய தவறுகள்கூட கண் எரிச்சல், சிவத்தல், வலி மற்றும் தீவிரமான கண் தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம்.
காண்டாக்ட் லென்ஸ் நமக்குப் பார்வைத் தெளிவையும் வசதியையும் அளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் முழுமையான பயனைப் பெறுவதற்கு முறையான பராமரிப்பும் பாதுகாப்பான பயன்பாடும் அவசியம்.

நாம் அன்றாடம் அறியாமல் செய்யும் தவறுகள் என்னென்ன? அவற்றை எப்படித் தவிர்ப்பது? லென்ஸைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் என்ன? இவை குறித்து இந்தக் காணொளியில் விரிவாகப் பார்ப்போம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |