உலக நாடுகளால் அதிகம் வெறுக்கப்படும் நாடு எது தெரியுமா? இந்தியாவும் இருக்காம்..
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பதட்டமான நிலை இருந்து வருகிறது. சில நாடுகள் போர்களும் செய்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் சமீபத்தில் World Population Review வெளியிட்ட அறிக்கையில், உலகத்தில் உள்ள அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அறிக்கைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் இரண்டையும் கணக்கில் வைத்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் அரசாங்கங்கள், கொள்கைகள் மற்றும் உலகளாவிய நடத்தை மீதான விரக்தியே இதற்கு காரணமாகும்.
அந்த வகையில் அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியல் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சீனா | உலக நாடுகளில் அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடு சீனா தான். ஏனெனின் சர்வாதிகார ஆட்சி, அடிமைத்தனம், கருத்து சுதந்திரத்தின் மீதான தணிக்கை மற்றும் உலகளாவிய மாசுபாட்டில் அதன் பங்கு உள்ளிட்ட காரணங்களால் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஹாங்காங், தைவான் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்கு சுதந்திரம் வழங்க மறுத்துள்ளது. அத்துடன் உய்குர் முஸ்லிம் மக்களை மோசமாக நடத்தும் குற்றமும் சீனாவில் நடக்கிறது. இதனால் மற்ற நாடுகள் நட்பு வைத்து கொள்ள பயம் கொள்கிறது. |
அமெரிக்கா | உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா மிகைப்படுத்திக் கொள்கிறது. உலக நாடுகளில் நடக்கும் மோதல்களில் தேவையின்றி மூக்கை நுழைத்து ஆயுதங்களை வழங்கும். அத்துடன் அவர்களுக்கு துரித உணவு வழங்கல் இப்படி தங்களின் சுயநலத்திற்காக அந்த நிலைமையை பயன்ப்படுத்திக் கொள்ளும். |
ரஷ்யா | மூன்றாவது இடத்தை பிடிக்கும் ரஷ்ய அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அதன் குடிமக்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் தான் உக்ரைன் போர் அவ்வளவு நாட்களாக நடந்து கொண்டிருந்தன. |
இந்தியா | மதரீதியான பதட்டங்கள், சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை மற்றும் இணைய தணிக்கை உள்ளிட்ட குற்றங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிகமான நாடுகளால் வெறுக்கப்படும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லைப் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை உள்ளிட்டவை மற்ற நாடுகளுடன் இருக்கும் நட்பை பகைத்துக் கொள்கிறது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |