இந்த ஒரு ரோஜாவின் விலைக்கு ஒரு மாளிகையே வாங்கிடலாம்... அப்படி என்ன சிறப்பு?
பொதுவாகவே காதலர் தினம் என்று வந்துவிட்டால் ரோஜா தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பும் மலர் என்ற பெருமையையும் இது பெருகின்றது.
உண்மையில் ரோஜா மலரின் வாசனைக்கு ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் ஒரு ரோஜாவைின் விலைக்கு ஒரு பெரிய ஆடம்பர மாளிகையே வாங்கிவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
உலகிலேயே மிக விலை உயர்ந்த ரோஜாவான ஜுலியட் ரோஜாவின் விலை பற்றி எப்போதாவது அறிந்திருக்கின்றீர்களா? அதன் விலையை கேட்டால் வாயடைத்து போய்விடுவீர்கள்.
ஆம் ஜுலியட் ரோஜா என்ற இந்த ரோஜாவை கோடிகளுக்கு சொந்தக்காரராக இல்லையென்றால் முகர்ந்து பார்க்கக்கூட முடியாது. அப்படி இதில் என்ன சிறப்பு இருக்கின்றது என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜுலியட் ரோஜா
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ரோஜாவானது பூப்பதற்கு 15 ஆண்டுகள் தேவைப்படுகின்றதாம். நீங்கள் எந்த மாதிரியான மோசமான மனநிலையில் இருந்தாலும் அதன் வாசனையை முகர்ந்தால் அற்புதமான மனநிலையை அது கொடுக்கும்.
மனஅழுத்தத்தை வெகுவாக குறைக்கும் பண்புகளையும் இந்த ரோஜா மலர் அதிகமாக கொண்டுள்ளது.
அதனால் தான் இது ஜுலியட் ரோஜா என்று பெயர் பெற்றுள்ளது.ஜூலியட் ரோஸ் மிகவும் விலையுயர்ந்த ரோஜா மட்டுமல்ல, உலகின் மிகவும் அழகான ரோஜாவாகவும் திகழ்கின்றது.
ஜூலியட் ரோஜாவின் சிறப்பு என்னவென்றால் 2006ம் ஆண்டு முதன்முதலாக வளர்க்கப்பட்ட இந்த ரோஜாவுக்கு டேவிட் ஆஸ்டின் என்பவரே சொந்தக்காரர்.
பல ஆண்டுகள் கடின உழைப்பின் பின்னர் பல சோதனைகளை தாண்டி இந்த விலையுயர்ந்த ரோஜாவை அவர் உருவாக்கியுள்ளார்.
பல்வேறு வகையான ரோஜாக்களை கலந்து இந்த ரோஜா உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது மிகவும் மதிப்புமிக்கது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
அதுமட்டுமன்றி இந்த மலர் வாடாமல் அல்லது உலராமல் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையில் அதே புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
2006 ஆம் ஆண்டில், இது 10 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 90 கோடி) விற்கப்பட்டது, இது வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் விலையுயர்ந்த ரோஜா என்ற பெருமையை பெறுகின்றது.
தற்போது அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.130 கோடியாகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |