இந்த உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வெச்சு சாப்பிடாதீங்க.. இல்ல ஃபுட் பாய்சன் ஆயிடும்.. ஜாக்கிரதை!
நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மக்கள் தங்களது வாழ்க்கைமுறையை அதிகமாக மாற்றியுள்ளனர். முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளைக் குறித்து கூற வேண்டும்.
முந்தைய காலத்தில் தினம் தினம் சமைத்து உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போது ஒருமுறை சமைத்துவிட்டு அதனை ஃப்ரிட்ஜில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடுகின்றனர்.
இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், வயிறு சம்பந்தமான பிரச்சனையையும் ஏற்படுத்துகின்றது. ஒரு கட்டத்தில் இது விஷமாகி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது.
எந்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளான இறைச்சி, மீன், பால், சீஸ், முட்டை இவற்றினை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. குளிர்ச்சியான நிலையில் உள்ள இறைச்சிகளில் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் செழித்து வளரும். எனவே ஃப்ரிட்ஜ்ஜில் இறைச்சிகளை வைக்கும் போது, அவற்றை முறையாக சேமித்து வைக்க வேண்டும்.
சமைத்து சாப்பிட்ட உணவுகள் மீதம் ஆகினால் அதனை நீண்ட காலம் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஏனெனில் பூஞ்சை, பாக்டீரியா போன்றவை செழித்து வளர்ந்து நோய்களை ஏற்படுத்தும்.
கீரைகள் மற்றும் வெட்டப்பட்ட பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடுவதுடன், கிருமிகள் வளரும் அபாயம் ஏற்படும். பின்பு சாப்பிடும் நமக்கு ஃபுட் பாய்சன் ஏற்படும்.
மீதமான சாதம் மற்றும் சமைத்த பாஸ்தா இவற்றினை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஏனெனில் இதில் பேசிலஸ் செரியஸ் பாக்டீரியாவைக் கொண்டுள்ளது.
இதே போன்று வேகமாக அழுகக்கூடிய மீன்களை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. சரியான முறையில் மற்றும் சரியான வெப்பநிலையில் சேமிக்கவில்லையெனில், ஹிஸ்டமைன் பாய்சன் ஏற்பட வழிவகுக்கும். எனவே முடிந்தவரை மீன்களை வாங்கியதும் உடனே சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |