வெறும் 15 நிமிடத்தில் மனிதர்களின் உயிரை பறிக்கும் எறும்பு! நம்பமுடியாத உண்மை
எறும்பு ஒன்று மனிதர்களை கடித்தால் விஷம் ஏறி மனிதர்கள் வெறும் 15 நிமிடத்தில் இறந்துவிடுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் உயிரை பறிக்கும் எறும்பு
நம் வீடுகளில் உலாவரும் பூச்சி வகைகளில் ஒன்றாக இருக்கும் எறும்புகள் மனிதர்களை கொலை செய்யுமா என்ற கேள்வி அனைவருக்கும் கட்டாயம் எழும்.
ஆம் சாதாரண வீடுகளிலும், மரத்திலும் வளரும் எறும்புகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது இல்லை. உலகில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எறும்பு வகைகள் இருக்கின்றன. ஆனால் காடுகளில் இருக்கும் மோசமான பெரிய எறும்புகள் புல்டாக் எறும்பு ஆகும்.
Myrmecia pyriformis எனும் அறிவியல் பெயர் கொண்ட எறும்புகள் அவுஸ்திரேலியா கடற்பரை பகுதியில் காணப்படுகின்றது. இந்த எறும்புகள் 21 நாட்கள் மட்டுமே வாழும் நிலையில், இவை அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.
இந்த எறும்பானது மனிதர்களை கடிக்கும் போது தனது தாடையை பயன்படுத்து விஷத்தை இரக்கவும் செய்கின்றது. இவை இவ்வாறு முரட்டுத்தனமாக கடிப்பதால் இதற்கு புல்டாக் என்று பெயர் வந்துள்ளது.
இந்த வகையான எறும்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை மீண்டும் மீண்டும் கடிக்கும் போது அதிக விஷத்தை செலுத்துகின்றது. இதனால் 15 நிமிடங்களில் உயிரை பறித்துவிடும். ஆனால் இந்த எறும்பானது 20 மில்லி மீட்டர் நீளமும், 0.015 கிராம் எடை கொண்டது ஆகும்.