காலையில் எழுந்ததும் இந்த உணவுகளை சாப்பிடுங்க! நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீங்க
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் அனைவரும் அவசர அவசரமாக கிளம்பி வெளியே வேலைக்கு செல்கின்றனர். ஆனால் இவ்வாறு செல்பவர்கள் காலையில் உணவு அருந்தாமல் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை உணவைத் தவிர்க்காமல் இருக்க வேண்டும் என்பதே மருத்துவரின் அறிவுரையாகும்.
ஏனெனில் நமது உடல் நாள்முழுவதும் ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்றால் நாம் காலையில் எடுத்துக்கொள்ளும் உணவு தான் முக்கிய காரணமாக இருக்கும். இங்கு காலையில் சாப்பிடக்கூடிய 3 உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முசேலி
ஓட்ஸ் வகையைச் சேர்ந்த முசேலியை காலை உணவாக உட்கொள்ளலாம். இதில் புரதச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், வயிற்றுப் பசியை ஏற்படுத்தாமல் இருப்பதடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.
முசேலியில் திராட்சை, பாதாம் மற்றும் பழங்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த பொருட்கள் இருப்பதால், இது தோல் பளபளப்பு, பளபளப்பான முடி மற்றும் ஆரோக்கியமான பார்வையை ஊக்குவிக்கிறது.
கார்ன் ஃப்ளேக்ஸ்
கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கும் கார்ன் ஃப்ளேக்ஸ் ஒரு சுவையான காலை உணவாகும். இதில் இரும்புச் சத்து மற்றும் சோடியம் அதிகமாக இருக்கின்றது.
ஸ்மூத்தீஸ்
இன்றைய தலைமுறையினரின் உணவுப்பழக்கங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது தான் ஸ்மூத்தீஸ். வைட்டமின், ஆன்டிஆக்ஸிடன்ட், ப்ரோபையோட்டிக்ஸ் ஊட்டசத்துக்கள் நிறைந்து இருக்கும் ஸ்மூத்தீஸை காலையில் சாப்பிட்டு செல்வது மிகவும் நல்லது.
இதைக் குடிப்பதால் புத்துணர்ச்சி மட்டுமல்ல இதயம், எலும்பு, குடல் ஆகிய உறுப்புகளுக்கு ஆரோக்கியம், மலச்சிக்கல் இல்லாம கழிவுகளை வெளியேற்றலாம்.