அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட நவதானிய தோசை: காலையில் சாப்பிட ஆரோக்கிய உணவு
Healthy Food Recipes
By Rinosharai
ஒவ்வொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அந்த உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் அப்படி காலையில் சாப்பிட ஏற்ற உணவுதான் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்த நவதானிய தோசை ரெசிபி.
தேவையான பொருட்கள்
- பாசிப்பயறு - கால் கப்
- கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப்
- கொண்டைக்கடலை - கால் கப்
- பச்சரிசி - கால் கப்
- துவரம்பருப்பு - கால் கப்
- கொள்ளு - கால் கப்
- சோயா - கால் கப்
- வெள்ளை சோளம் - கால் கப்
- எள்ளு - ஒரு மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3
- காய்ந்த மிளகாய் - 6
- இஞ்சி - ஒரு துண்டு
- தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு ஊறிய தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசையாக ஊற்றி எடுத்தால் சத்தான நவதானிய தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US