தயவு செய்து காலையில் இதை மட்டும் பார்க்காதீர்கள்!
ஒவ்வொரு நாள் விடியலும் நமக்கொரு புது அனுபவத்தையும் நம் வாழ்வில் புதிய அத்தியாயத்தையும் கொடுக்கும்.
ஒரு நாள் எப்படி அமையப் போகிறது என்பது அந்த நாளில் நாம் நித்திரை விட்டெழும்பியதுமே தெரிந்துவிடும்.
காலையில் எழும்பும்போது இன்றைய நாள் எவ்வாறு அமையப் போகிறதோ என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் நிச்சயம் இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் சில விடயங்களை பார்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அவற்றைக் குறித்து பார்ப்போம்...
தொலைபேசி
காலையில் எழுந்தவுடனேயே தொலைபேசி பார்ப்பதை தவிருங்கள். ஏனென்றால் அதில் ஏதாவது அதிர்ச்சி செய்திகள் வந்திருந்தால் அதைப் பார்த்ததும் உங்கள் உடலும் மனமும் ஒருவித சோர்வை எதிர்கொள்ளும். இது அன்றைய நாள் முழுவதிலும் தாக்கத்தை செலுத்தும்.
சண்டைகள்
சண்டை போடுதல், சண்டை மாதிரியான விவாதங்களை யாரிடமும் வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்நாள் முழுவதுமே ஒருவித சலசலப்பை ஏற்படுத்திவிடும்.
தீ காட்சிகள்
நித்திரை விட்டெழுந்ததுமே தீ சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்க்கக்கூடாது. இது அன்றைய நாளில் தீராத கஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற விடயங்களை தவிர்த்தல் அன்றைய நாளை நல்ல நாளாக மாற்ற உதவும் என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.