சூர்யாவின் அலங்கோலத்துக்கு காரணமாகும் சுந்தரவள்ளி- நந்தினி எடுக்கப்போகும் முடிவு என்ன?
சூர்யாவின் அலங்கோலத்துக்கு என்ன காரணம் என்பதனை முதல் முறையாக மாமனார் கூறுகிறார்.
மூன்று முடிச்சு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் மூன்று முடிச்சு.
இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆரம்பமானது. அப்பாவி பெண் மற்றும் அவளுடன் விளையாடும் பணக்காரக்குடும்பத்தையும் அடிப்படையாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், தங்க இடம் கொடுத்த முதலாளி ஏமாற்றக் கூடாது என்ற முடிவில் நாயகி நந்தினியும் அவரது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். நந்தினியும் அவரது தந்தையும் உழைத்து தான் தனது இரண்டு தங்கைகளையும் படிக்க வைக்கிறார். இவர்களுக்கு ஒரு பாட்டியும் இருக்கிறார்.
இந்த நிலையில் முதலாளி வீட்டு பையனான சூர்யா எப்போதும் குடித்து விட்டு குடிப்போதையில் அம்மாவை பழிவாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சூர்யாவின் சகோதரிகள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
சூரியாவின் அவல நிலைக்கு என்ன காரணம்?
இப்படியொரு நிலையில் சூர்யாவிற்கு அர்ச்சனா என்ற பெண்ணும் திருமணம் முடிவாகின்றது. தனது அம்மா பார்த்த பெண் என்பதால் அவரை பழிவாங்குவதற்காக ஏழை வீட்டு பெண்ணான நந்தினி கழுத்தில் தாலியை கட்டுகிறார்.
இதனை தொடர்ந்து, ” ஏ பொண்டாட்டி..” எனக் கூறி அவருடைய வீட்டு அழைத்து வருகிறார். ஆனால் இந்த திருமணத்தில் சூர்யா வீட்டிலுள்ளவர்களுக்கும், நந்தினி வீட்டில் உள்ளவர்களுக்கும் துணியளவும் விருப்பமில்லை.
தாலிக்கட்டி வீட்டிற்கு வந்த மருமகளை திருப்பி அனுப்பும் முடிவில் சூர்யாவின் அப்பா இல்லை. மாறாக அவருடைய எப்படியாவது நந்தினியை துரத்தி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
சூர்யா இப்படி குடிப்போதையில் இருக்க என்ன காரணம் என தெரியாமல் நந்தினி மற்றும் அவருடைய குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
மருமகளை சமாதானம் செய்வதற்காக மாமனார் காரணத்தை கூறுகிறார். இதன் பின்னர் நந்தினி என்ன முடிவு செய்வார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |