மழைக்காலத்தில் ஏற்படும் அலர்ஜிலிருந்து தப்பிக்கனுமா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
மழைக்காலத்தில் ஏற்படும் அலர்ஜியை தடுக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மழைக்காலம்
மழைகக்காலம் வெயிலிருந்து மக்களுக்கு நிம்மதி அளித்தாலும், பல இடங்களில் இவை கனமழையாக பெய்து பெரும் சேதத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது.
அதிலும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே அதனுடன் சேர்ந்து பருவகால அலர்ஜிகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தும்மல், கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற மழை காலங்களில் வரும் பொதுவான பிரச்சினைகள் ஆகும்.
இந்த பிரச்சனை சிறியதாக இருந்தால் சிலர் சமாளித்து விடுகின்றனர். ஆனால் தீவிரமாக இருக்கும் போது அன்றாட வேலைகளை செய்வது மிகவும் சவாலாக மாறிவிடுகின்றது.
மழை காலத்தில் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க உணவில் சில முக்கிய மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். இந்த உணவுகள் அலர்ஜியை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
அலர்ஜியை தடுக்கும் உணவுகள்
சமையலறையில் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாக இருக்கும் மஞ்சளில் குர்மின், அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இரவில் தூங்கும் முன்பு பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ஒவ்வாமை பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.
இதே போன்று பூண்டு இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும், ஆண்டி வைரஸ் பண்புகளையும் கொண்டுள்ளது. இதில் இருக்கும் அல்லிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. தொற்று நோய்களை எதிர்த்து போராடவும், அலர்ஜி பிரச்சனை, சளி, காய்ச்சல், சுவாசத் தொற்றுக்களையும் குறைக்கின்றது.
இஞ்சியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், நோய் தொற்றுகளை குறைத்து, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொடுக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சியை மழைக்காலத்தில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் அதிகம் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, வீக்கத்தை குறைக்கின்றது.
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை மழை காலத்தில் எடுத்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதில் வைட்டமின் ஈ, துத்தநாகம், ஆரோக்கியமான கொழுப்பும் இருக்கின்றது. எனவே மழைக்காலத்தில் தினமும் சிறிதளவு பாதாம், பிஸ்தா, சியா விதைகள், உலர் திராட்சை, வால்நட் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |